சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை. வழமையான தலைவர்கள்போல் சஜித் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கையின் காரணமாகவே எமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது குறித்து வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,
கேள்வி: தமிழரசுக்கட்சி வவுனியாவில் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் உங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கும்போது உங்கள் கட்சி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறதே.
பதில் : நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விவகாரம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல்முறை ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஆனால் அவர்களின் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் புளொட் அமைப்பு அன்று இருக்கவில்லையென்பது உண்மைதான். நிலமைகளை நிதானமாக அவதானித்து முடிவு எடுக்கவேண்டுமென்று பொறுத்திருந்தோம். அதன்பின் எமது கட்சியின் மத்திய குழு கூடி நாங்களும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருந்தோம். கூட்டமைப்பின் முடிவை அறிந்த பின்பு கூறலாம் என்று காத்திருந்தோம். அதேவேளை வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவா ஒன்றியங்கள் ஒன்று சேர்ந்து சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் முயற்சி காரணமாக ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று கூடி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து ஐந்து கட்சிகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. ஐந்து கட்சிகளாலும் சேர்ந்து எடுத்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவோ அது பற்றி பேசவோ தயாராக இருக்கவில்லை. இந்நிலையில்தான் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞபபனத்தின் அடிப்படையில் தீhமானிப்பது என்ற முடிவுக்கு நாம் வந்திருந்தோம்.
எங்கள் கட்சிக்குள் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்தி ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டது. நாங்களும் மற்ற தமிழ் கட்சிகளும் ஒன்று கூடி ஒரு ஒற்றுமையான முடிவுக்கு வரவேண்டுமென்று நாம் எதிர்பார்த்திருந்தபோதும் துரதிஸ்டவசமாக ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க தொடங்கிவிட்டன.
அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பது நல்லது என்ற அடிப்படையில் எமது முடிவை தெரிவித்திருந்தோம். ஆனால் ரெலோ தமது முடிவை தெரிவிக்காத நிலையில் அவர்கள் முடிவு அறிவிக்கப்பட்டபின்பு கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என நாம் எதிர்பார்த்தோம் அது எமது நோக்கமாகவும் இருந்தது. அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களுடைய தீர்மானம் பிழைத்துப்போய்விடுமென்று நாம் எண்ணினோம்.
எது எப்படியிருந்தாலும் பெரும்பான்மையான வடக்கு மக்கள் புதிய ஜனநாக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்ட நிலையினை நாம் அறிந்த காரணத்தினால் நாமும் அந்த முடிவுக்கு வரவேண்டிய தேவையிருந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பலருடன் கலந்துரையாடியதன் அடிப்படையிலையே எம்மால் இந்த முடிவுக்கு வரமுடிந்தது. பொதுவாக ராஜபக்ஷ அணியினர் சார்பாக வடக்கு மக்கள் கொண்டிருந்த விசனத்தையும் அதிருப்தியையும் நாம் நன்றாக கண்டுகொண்ட காரணத்தினால்தான் எமது முடிவை தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது.
கேள்வி : சஜித்தை ஆதரிக்கும் முடிவை அறிவித்ததன்பின் தலைவர் சம்பந்தன் உங்களுடன் தொடர்பு கொண்டாரா?
பதில் : ஆம் தொடர்பு கொண்டார். தாங்கள் எடுத்த முடிவு தொடர்பாக என்னிடம் விரிவாக விளக்கினார். நாம் இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக உரையாடியுள்ளோம் என்று கூறினார். சம்பந்தன் அண்ணனின் நியாயத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு அவரது விளக்கம் இருக்கவில்லை. கூட்டமைப்பின் கலந்துரையாடல்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற வேளையிலெல்லாம் எமது கருத்துக்களை தெரிவித்தோமேதவிர மறுதலிப்பு கொண்டவர்களாகவோ அல்லது எதிர்ப்பை தெரிவிப்பவர்களாகவோ நாம் செயற்படவில்லை. தமிழரசுக் கட்சியுடன் ஒத்துப்போவதற்கே தயாரகவே இருந்தாம்.
கேள்வி : சஜித்தை ஆதரிக்கப் போவதாக கூட்டமைப்பு எடுத்த முடிவு தொடர்பில் மஹிந்த தரப்பினர் சமஷ்டி வழங்க உடன்பாடு காணப்பட்டது என்கிறார்களே?
பதில் : கூட்டமைப்பின் அறிக்கையானது தெற்கில் பாரிய அதிர்வை உண்டாக்கும் என்பதை நாம் ஏலவே அறிவோம். தென்னிலங்கை இனவாத சக்திகள் இதையொரு பாரிய ஆயுதமாக பாவிக்கும் என்பது அறியாத விடயமல்ல. கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் இனவாத கோஷங்கள் இடம்பெற்றே வந்திருக்கின்றன.
இதேநேரம் கூட்டமைப்பின் இத்தீர்மானம் தொடர்பில் தமிழ் தரப்பினரில் சில குழுவினர்கூட வேறு விதமாக கூறுகிறார்கள். அது வென்னவெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தீர்மானத்தின்மூலம் வட கிழக்கை சிங்கள தலைமைகளுக்கு விற்றுவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். எவ்வித உத்தரவாதமும் பெறாமல் 13 அம்ஷ கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற வேட்பாளர் ஒருவருக்கு கூட்டமைப்பு ஆதரிக்க தீர்;மானம் எடுத்திருப்பது தமிழ் இனத்தை காட்டிக்கொடுக்கும் துரோக செயல் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் இவ்வித எதிர்க்கருத்துக்கள் இனத்துவேஷங்களான பேச்சுக்கள் கடுமையான பிரச்சாரங்கள் இடம்பெறுவது வழமையான விடயம். இதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது எமக்குத் தெரியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தமிழ் மக்களுக்கான பிரச்சனையைத்தீர்பேன் என சங்கற்பம் பூண்டு தென்னிலங்கை மக்களிடம் வாக்கு கேட்டபோது 62 வீதமான வாக்கக்களைப்பெற்று ஜனாதிபதியானார். இனவாதத்துக்கு சிங்கள மக்கள் அக்காலத்தில் துணைபோவில்லை. ஆனால் அன்றைய நிலைப்பாடு வேறு இன்றைய சூழல் வேறு. இன்று சிங்கள மக்கள் மனதில் பல்வேறு சக்திகளின் ஊடுருவல் காரணமாக நிலமைகள் மாறிவிட்டன. இருந்த போதிலும் எங்கள் நிலைபபாட்டை சிங்கள தலைமைகளுக்கு கூறியுள்ளோம் கூட்டமைப்பு சஜ்pத் பிரேமதாஸவுக்கு வழங்கவிருக்கும் ஆதரவு தொடர்பில் பெரிய அளவில் தெற்கில் பாதிப்பை உண்டு பண்ணும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை
கேள்வி: மட்டக்களப்பில் வைத்து பரதமர் ரணில் தீர்வை தருவேன் என வாக்குறுதி வழங்கியுள்ளார். ஏலவே நாலரை வருடங்களாக ஏமாற்றிய ஒருவரை தொடர்ந்து நம்பமுடீயமா என்று கிழக்கு மக்கள் கேட்கிறார்களே.
பதில் : நாங்கள் நம்புகிறோமா இல்லையா என்பது இப்போதைய பிரச்சினையல்ல. தமிழ் மக்களுக்கான பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே செய்து முடிக்கப்படவில்லையென்ற பாவனையைக் காட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். தமிழ் மக்கள் பிரச்சனை 70 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினை. இன்னும் தீர்;க்கப்படவில்லை. பல ஒப்பந்தங்கள் எழுதப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டது. பல தீhவு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன இவ்வாறு பல விடயங்கள் நடந்தேறியுள்ளன.
சிங்கள அரசியல் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் அதிகாரப்பரவலாக்கத்துக்கு எதிரானவர்கள். நான் இங்கு சிங்கள மக்களை குறிப்பிடவில்லை. அரசியல் தலைமைகள் பற்றியே கூறுகிறேன். இது தான் தமிழ் மக்களின் நியாயமான தீர்;வை பெறமுடியாமைக்குரிய காரணங்களாகும். இருந்தாலும் தீhவுக்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எடுக்காமலும் எம்மால் இருக்க முடியாது. அவர்கள் தரமாட்டார்கள் செய்யமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு நாங்கள் வாழாது இருக்கமுடியாது.
முயற்சி எடுக்காமல் விடுவோமாயின் அது சிறிது சிறிதாக மெல்ல சாகும். எமது கோரிக்கைகளை வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பதன் மூலம் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். அவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் நாம் ஏதோ ஒரு தரப்பினருடன் அல்லது கட்சியுடன் பேசித்தான் ஆகவேண்டும். அழுத்தம் கொடுக்கவேண்டும்.
போட்டியிடும் இரு வேட்பாளர்களுமே நம்ப முடியாதவர்கள்தான். 13 அம்ஷ கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர். இந்த 13 அம்ஷ கோரிக்கை தொடர்பில் நாம் அவர்களுடன் உரையாடியபோது இதில் உள்ள முழு அம்ஷங்களையும் ஏற்கவேண்டும் என்பது அவசியமல்லை இதில் உள்ள சிலவற்றையாவது ஏற்பீர்களாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்கலாமென்று பேசினோம். ஆனால் இரு வேட்பாளாகளுமே இது பற்றி பேச முடியாது என்று கூறியது எமக்கு ஏமாற்றமாகவே இருந்தது. எதுவாக இருந்தாலும் அவர்கள் எம்முடன் பேசியிருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை.
சிங்கள மக்களுக்கு சஜித் பெரியதுரோகம் செய்துவிட்டார். ஏமாற்றிவிட்டார். தமிழ் தலைமைகளுக்கு அடிபணிந்து விட்டார் வாக்கு கொடுத்துவிட்டார் என்ற துவேஷமான பிரச்சாரங்கள் தெற்கில் தீவரப்படுத்தப்பட்டு வருவது உண்மையே. இதன் காரணமாகவே அவர்கள் ஐந்து கட்சிகளையும் சந்திக்க தயக்கம் காட்டினார்கள்;. பிரதான இரண்டு வேட்பாளர்களுடைய விஞ்ஞாபனத்தைப் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாஸாவின் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானதாக இருந்த காரணத்தை ஏற்றுக்கொண்டே அவரை ஆதரிக்கவேண்டுமென்ற முடிவுக்கு கூட்டமைப்பு வந்துள்ளது. எவ்வாறு இருந்த போதிலும் எல்லோரும் சேர்ந்து இத்தீர்மானத்தை எடுத்திருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்குமென்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.
கேள்வி : ஒற்றையாட்சி முறைமைக்கு அப்பால் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்லமாட்டேன் என்று சஜித் அடித்து கூறியுள்ளாரே?
பதில் : உண்மைதான். சமஷ்டியை சஜித் தருவார் என்று நாம் எதிர்பார்க்கவுமில்லை நான் அதை நம்ப தயாராகவுமில்லை. ஆனால் தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினையை தீhப்பதற்கான முயற்சிகளை எடுப்பார் என்று நம்பும் காரணத்தினாலேயே குறித்த முடிவுக்கு கூட்டமைப்பு வந்துள்ளது. அவருடன் சுதந்திரமான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். எமது அழுத்தங்களை பிரயோகிக்கலாம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான தீர்;வை தரவேண்டிய பிரயத்தனங்களை எடுப்பார் என்ற நம்பிக்கை காரணமாகவே இத்தகையதொரு முடிவக்கு நாம் வந்திருக்கிறோம்.
கேள்வி : வடகிழக்கு மக்கள் ஏலவே தீர்மானித்துவிட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் அதேவேளை கிழக்கிலுள்ள 10 கட்சிகளின் கூட்டு பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளார்கள் அதுபோல் வடக்கிலும் காணப்படுகிறதே?.
பதில் : உண்மைதான். வட கிழக்கிலுள்ள பெரும் பான்மையானோர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வாகளிக்க தீhமானித்துவிட்டார்கள் என்றே கூறவிரும்புகிறேன். ஏந்தவொரு விடயத்திலும் கருத்து வேறுபாடுகள் விருப்பு வெறுப்பக்கள் காணப்படுவது இயற்கை. ஆகவேதான் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கும் தரப்புக்களும் வட கிழக்கில் காணப்படுகின்றன. அது மட்டமன்றி ஏனைய வேட்பாளர்களை ஆதரிக்கும் தரப்பினரும் இருக்கலாம். இருந்தபோதிலும் எனது கணிப்பின்படி சஜித்துக்கு பெரும்பான்மையான ஆதரவு காணப்படுகிறது என்பதே எனது அபிப்பிராயம். இது எவ்வாறு தெரிந்துகொள்ள முடிந்ததென்றால் இதுபற்றி தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளேன். கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கிறேன் இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் எம்மால் ஒரு தீhமானத்துக்கு வரமுடிந்தது.
மக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி-
(திருமலைநவம்)
(10.11.2019)