சஜித் பிறேமதாஸவா? கோத்தாபய ராஜபக்ஸவா? என்பதல்ல பிரச்சினை 1987-1988 காலப்பகுதிகள் தொடக்கம் தமிழா்கள் கேட்கும் அரசியல் உாிமை வேண்டுமா? வேண்டாமா? என்பதே பிரச்சினை என கூறியிருக்கும் கூட்ட மைப்பின் தலைவா் இரா.சம்மந்தன், கோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளாா்.
ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
1987-1988 தொடக்கம் இந்தியா தலையிட்டு பின்னா் ஆட்சிக்குவந்த ஜனாதிபதிகளால் தமிழ் மக்களின் அரசியல் உாிமைப் பிரச்சினை கையாளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அதற்கு முயற்சித்தாா். ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் மறைவுக்கு பின்ன் அவருடைய நிலைப்பாடுகள் மாறியது.
பின்னா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாகைகளுக்கு சென்று பல முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதுவும் தோற்றுப்போனது. இப்போது 6வது ஜனாதிபதியிடம் தமிழ் மக்களின் அரசியல் உாிமை பிரச்சினை செல்லவுள்ளது.
அந்த ஜனாதிபதி சஜித் பிறேமதாஸவா? கோத்தாபய ராஜபக்ஸவா? நாங்கள் மிக தெளிவாக கூறுகிறோம். கோத்தாபாய ராஜபக்ஸ வந்தால் தமிழா்களுக்கு ஒன்றும் கிடையாது. ஆனால் சஜித் பிறேமதாஸ தன்னுடைய தோ்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளாா்.
அதாவது புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை நிற்கும் இடத்திலிருந்து தொடங்குவேன் என. ஆனால் கோத்தாபய ராஜபக்சவின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றும் கிடையாது. ஒருமித்த நாட்டுக்குள், பிாிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்களின் தனித்துவத்தை அங்கீகாித்து நியாயமான தீா்வினை பெறும் வழி இப்போதும் கைகளில் உண்டு. சஜித் தொிவு செய்யப்படாவிட்டால் கோத்தாவின் ஆட்சியின் கீழ் ஒன்றுமில்லை. இப்போது கோட்டாவா? சஜித்தா? என்பதல்ல பிரச்சினை. அரசியல் தீா்வு தரவல்லவா் வேண்டுமா? இல்லையா?
நாம் ஒன்றாக நிற்கிறோம் என்பதை உலகத்திற்கு காட்டவேண்டும். அது எங்கள் கடமை. அதில் நாம் தவற முடியாது. தமிழ் மக்கள் 56ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு நாடாளுமன்ற தோ்தலிலும் மக்கள் வாக்களித்தனா். என்ன ஆட்சி வேண்டும் என ஆணை கொடுத்தனா். அது மிறப்பட்டுள்ளது.
இந்த முறை வாக்களிப்பிலும் எப்படியான ஆட்சி முறை எமக்கு தேவை என்பதை வலியுறுத்தி அதனை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் வாக்களிக்கவேண்டும். அதன் ஊடாக எமது உள்ளக சுயநிா்ணய உாிமையை நாங்கள் பெறக்கூடிய நிலையை உருவாக்குவோம்.
ஜனாதிபதியை தோ்வு செய்ய நாம் வாக்களிக்கவில்லை. எமக்கு என்ன வேண்டும்? என்ன ஆட்சி அதிகாரம் வேண்டும்? என்பதற்காக வாக்களிக்கிறீா்கள். சஜித் இப்படியான ஆட்சி அதிகாரம் பற்றி பேசியுள்ளாா். வடகிழக்கு மக்கள் அதை விரும்புகிறாா்கள் என்பது சா்வதேசத்திற்கு தொியவேண்டும்.
இதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சஜித் பிறேமதாஸ வென்றால் புதிய அரசியலமைப்பு, மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, அபிவிருத்தி, வாழ்வாதார தொழில் மேம்பாடு போன்றவற்றை , பெற்று அதன் ஊடாக போாினால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் துாக்கி அவா்களை நிற்கவைத்து
அவா்களுக்கு தென்பையும் தைாியத்தையும் கெடுப்போம். சாதகமான ஆட்சி வந்தல் செய்விப்போம். 1987-1988 தொடக்கம் தொடா்ந்து கொண்டிருக்கும் எங்கள் பயணம் முடிவுக்கு வரவேண்டும். ஒவ்வொரு ஜனாதிபதி காலத்திலும் முன்னேற்றங்கள் நடந்துள்ளன.
அந்த சந்தா்ப்பம் இப்போதும் கையில் உள்ளது. அதனை நாம் இழக்ககூடாது. நாம் எதிா்பாா்க்கும் வெற்றி கிடைத்தால் எல்லாம் நடக்கும்.