212
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
அதனை அடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, காவல்துறையினர் அவரை பலவந்தமாக கைது சென்று தூக்கி சென்றனர். #உண்ணாவிரதம் #தம்பிராசா #கைது #மஹிந்ததேசப்பிரிய
Spread the love