180
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். இதன்படி இன்று காலை முதல் 12 மணிவரை கம்பஹாவில் 40 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 55 சதவீத வாக்குப் பதிவுகளும், நுவரெலியாவில் 50 சதவீத வாக்குகளும், காலியில் 50 சதவீத வாக்குகளும் மற்றும் மாத்தறையில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 55% வாக்குகளும், கொழும்பில் 40% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன
Spread the love