160
இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில்நேற்று மாலை குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். காவற்துறையினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love