காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமே இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமை , கொலைக்குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர் ஹேமசிறி பெர்ணான்டோவின் பெயரில் எவ்வித தனியார் அல்லது அரச வங்கிகள் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் 5 வங்கி கணக்குகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல’துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயங்கள் கருத்திற்கொண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. #பூஜித்ஜயசுந்தர #ஹேமசிறிபெர்னாண்டோ #விளக்கமறியல்