153
ஓய்வூப்பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இன்று (20.11.19) பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை நேற்று (19.11.19) நியமித்தார். அவர் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி 2 வது லெப்டினனனாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார். இராணுவத்தில் பல பதவிகளை வகித்துள்ள அவர் இறுதிப் போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார். 2016 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பிரேசிலுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றினார்.
Spread the love