விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது
முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானேர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார்.
அமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரிபார்த்த குடியுரிமை அதிகாரிகள் அனைவரையும் அவர்களது ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
முன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் டெல்லி வந்த பின்னர்தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச முகவர்களிடம் தலா 25 லட்சம் ரூபா வரை கொடுத்ததாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். #இந்தியர்கள் #அமெரிக்கா