ஹொங்கொங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஹொங்கொங்; மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
கடந்த மே மாதம், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா ஹொங்கொங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்ததனையடுத்து ஜ சர்ச்சைக்குரிய குறித்த மசோதா திரும்பப்பெறப்பட்டது.
எனினும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹொங்கொங்கில்; குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறைகளும் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆரம்பம் முதலே ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் எழுப்பி வருகின்ற நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் அமெரிக்கர் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதில் முதல் மசோதா ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும் என்பதுடன் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இNதுவேளை ஹொங்கொங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது #ஹொங்கொங் #அமெரிக்கா #பொருளாதாரதடை