Home இலங்கை பொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதற்கு இராணுவத்தினர் கடமையில்….

பொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதற்கு இராணுவத்தினர் கடமையில்….

by admin


நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் ஊடாக 25 நிர்வாக மாவட்டத்தினுள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More