பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்த மகாராஷ்டிரா ஆளுநரின் முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை நாளை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாஜகவை மகாராஷ்டிர ஆளுநர் ஆட்சி அமைக்கக் கோரி அழைப்பு விடுத்த கடிதத்தையும், தங்களுக்குள்ள ஆதரவை தெரிவிக்க பட்னவிஸ் ஆளுநரிடம் சமர்ப்பித்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை இன்று காலை உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரணைக்கு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது #மகாராஷ்டிரா #அரசமைப்பு #உச்சநீதிமன்றம் #பாரதியஜனதாகட்சி