சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறையில் அதிகாரியாக இருந்த 55 வயதான ஜெர்ரி சுன் ஷிங் லீ என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்ள்ளது.
நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்கள் தெரிந்த இவர் மூலமாக சில முக்கிய ராணுவ ரகசிய தகவல்களை பெறுவதற்காக சீனா 1 லட்சம் டொலர் பணம் தருவதாக பேரம்பேசப்பட்டுள்ளதுடன் இந்த ஒத்துழைப்புக்காக ஆயுள்காலம் முழுவதும் கவனித்துக்கொள்வோம் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது
அதற்கு இணங்கிய ஜெர்ரி சீனாவுக்காக உளவு பார்த்து முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார். இந்தவிடயம் அமெரிக்காவினால் கண்டுபிடிக்கபப்பட்டதணையடுத்து அவர் கைது செய்து செய்யப்பட்டதுடன் அமெரிக்க நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது தன் மீதான உளவு குற்றச்சாட்டுகளை ஜெர்ரி ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #சீனா #உளவு #அமெரிக்கஅதிகாரி #சிறை