ஹொங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி இயக்கம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்ட 241 இடங்களில் 201 இடங்களை ஜனநாயக ஆதரவு இயக்கம் கைப்பற்றியுள்ளதாகவும் சீன அரசு ஆதரவு வேட்பாளர்கள் 28 இடங்களை மட்டுமே வென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உள்ளூராட்சி தேர்தலில் சுமார் 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இது 71 சதவீதத்தும் கூடுதலான வாக்குப்பதிவாகும்.
கடந்த 5 மாதங்களாக ஹொங்கொங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசு கையாண்ட விதத்துக்கு மக்கள் அளிக்கும் பதிலாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும் சீன அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் தோல்வியடைந்த நிலையில், இது அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது #ஹொங்காங் #தேர்தல் #ஜனநாயக #எதிர்க்கட்சி #முன்னிலை #சீனஅரசு