764
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாவீரர் வாரத்தின் இறுதிநாளான 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love