ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அங்கீகரித்த பிரேரணை தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த பிரேரணைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநட்டலுவல்கள் அமைச்சினை பொறுப்பேற்ற அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்தினம் அது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை புதிய அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த அவர் இடைக்கால அரசாங்கத்தின் கால எல்லைக்குள் இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த ஜனாதிபதி தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது #ஐ.நா #பிரேரணை #நீக்குவதற்கு #தினேஷ் குணவர்த்தன