நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை உடைத்தெறிய கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்கிமரசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள சபாநாயகர் இந்த விடயத்தில் பிரச்சினைகள் காணப்பட்டால் கட்சிக்குள் அது தொடர்பில் தீர்வொன்று காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவொன்றின் மூலம் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #எதிர்கட்சித்தலைவர் #ரணில்விக்கிரமசிங்க #சபாநாயகர்