கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றினர். பொதுச் சுடரினை மூன்று மகாவீரரின் தந்தை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேவேளை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலும் மக்கள் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தினர். மழை பலமுறை குறு்கிட்ட போதிலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மக்கள் இம்முறையும் கலந்துகொண்டு தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 06.03 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு அஞ்சலிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இவ்வருடம் பொதுச்சுடரினை 4 மாவீரர்களின் தந்தையான வைத்திலிங்கம் சண்முகம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர்கள் மாவீரர்களின் உறவுகள் ஏற்றி அஞ்சலித்தனர். கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலிற்காக 3000 ஈகைச்சுடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும் #மழை #கிளிநொச்சி #மாவீரர்களுக்கு #அஞ்சலி