204
மன்னார் மாவட்ட மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் கண்ணீருக்கு மத்தியில் உணர்வெளிச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் இன்று புதன் கிழமை (27) மாலை இடம் பெற்றது.
இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.பண்டிவிருச்சானை சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொண்ணுச்சாமி ராமநாதன் என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினை வேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளது.இறுதியில் மாவீரர்களின் நினைவாக குடும்பத்தினருக்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.இதே வேளை மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தினம் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #மாவீரர்துயிலும்இல்லம் #நினைவேந்தல்
Spread the love