கரவெட்டி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று (நவ.28) வெள்ளிக்கிழமை சபையின் தவிசாளார் தங்கவேலாயுதம் ஐங்கரனால் முன்மொழியப்பட்டது.
150.6 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படும் வருமானாக காட்டப்பட்டுள்ளது. செலவு திட்டத்தில் வீதி அமைப்பிற்கு 20 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்திக்கு 35 மில்லியன் ரூபாவும், வீதி பராமரிப்பு, வாகனங்கள் கொள்வனவு செய்ய 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர். ஈ.பி.டி.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.
சமூகமளித்த 21 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதனால் சபையின் ஏகமனதாக வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. #கரவெட்டி #பிரதேசசபை #வரவுசெலவுதிட்டம்