Dec 3, 2019 @ 21:46
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் சமஸ்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், சட்டமா அதிபர் அலுவலகம் (OAG) தாக்கல் செய்த குற்றச்சாட்டில் இருந்து 12 பேரை விடுவித்துள்ளது.
1999 மற்றும் 2009 க்கு இடையில் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு (LTTE) நிதி திரட்டுவதன் மூலம் சுவிஸ் தண்டனைச் சட்டத்தை மீறியதாகவும், அதன் ஒன்பது ஆண்டு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளை நிதி ரீதியாக ஆதரித்ததாக சந்தேகித்தும், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு (WTCC). உறுப்பினர்கள் 12 பேருக்கு எதிராக மீது வழக்கு தொடர்ந்தது.
எனினும் 2018 யூன் மாதம் சமஷ்டி நீதிமன்றம் விடுதலைப் புலிகளிற்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளுக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால் 2018 ஜூன் மாதத்தில் LTTE மற்றும் (WTCC) ஆகியவற்றுக்கு இடையேயான படிநிலை இணைப்பை போதுமான அளவில் நிறுவ முடியவில்லை என்பதை பெடரல் குற்றவியல் நீதிமன்றம் கண்டறிந்தது. அத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் குழுவாக கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் நீதிபதிகள் தீர்மானித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தீர்ப்னை தீர்ப்பை எதிர்த்து, சட்டமா அதிபர் அலுவலகம் (OAG) மேல்முறையீடு செய்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு குற்றவியல் குழுவை ஆதரித்ததாகவும் வலியுறுத்தி இருந்தது. இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.
சுவிஸின் குற்றவியல் கோவையின் 260 ஆவது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மாஃபியா, அல்ஹூவைதா, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பயங்கரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், நிதி திரட்டப்பட்ட காலத்தில் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அக்காலப் பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்கள், பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், தமது இனத்துவக் குழுமத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதும், சுயாதீன இன சமூகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றனர், இவர்களில் பெரும்பாலனவர்கள் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த தீவின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி ஓடிய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என சுவிற்சலாந்து உடகங்கள் தெரிவித்துள்ளன.