சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10.12.19) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம், சர்வதேசத்துக்கு உடனடியாக பதில் கூற வேண்டும் எனக் கோரி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.