இலங்கை பிரதான செய்திகள்

“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்” -ஜனாதிபதி அலுவலகம் நோக்கி  நடைபயணம்

“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்” எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் நோக்கி  நடைபயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து தனது தாயின் ஆசிர்வாதத்தோடு நடை பயனத்தை ஆரம்பித்துள்ளார். சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும் , நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார். நடைபயணத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.  #ஜனாதிபதிஅலுவலகம்  # நடைபயணம் #சகாதேவன் #விகாரை
 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.