சுவிற்சலாந்து தூதரக பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், இவ்விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் போது குறித்த அதிகாரி, தொடர்ந்தும் முரண்பட்ட கருத்துகளையே தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது
நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரணவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயற்படவே அரசாங்கம் விரும்புவதாகவும் சுவிற்சலாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் திறந்த, வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சம்பவமாகவே தாம் பார்ப்பதாகவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சருமான ரமேஷ் பத்திரண விசாரணைகளின் முடிவைப் பொறுத்தே குறித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதா, இல்லையா எனத் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #சுவிற்சலாந்து #தூதரகஅதிகாரி #குற்றச்சாட்டு