சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்து அவற்றினை கண்காணிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சர்வதேச பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்காமையினால் குறித்த பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த முடியாத நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கற்பித்தல் முறைகள் , மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய முடியாத சூழ்நிலையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் தகமைகளில் சிக்கல்கள் காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்தப் பாடசாலைகளை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #சர்வதேசபாடசாலைகள் #கண்காணிக்க #கல்விஅமைச்சு