தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று காவல்துறை அதிகாரிகள் பலர் சாட்சியம் வழங்கவுள்ளனர். கொழும்பு வடக்கு காவல்துறைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி காவல்துறைமா அதிபர் காரியாலயத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன உள்ளிட்ட பலரே இவ்வாறு இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளனர்.
இதேவேளை குறித்த ஆணைக்குழுவில் நேற்றையதினம் காவல்துறை பொறுப்பதிகாரிகள் பலர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர்.
இதன்போது தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தாக காவல்துறை முறைபாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு , கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த காவல்துறை அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தனக்கு அழுத்தங்களை பிரயோகித்தாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்தமைக்காக தன்னை இடமாற்றம் செய்ததாகவும் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் காவல்துறை உத்தியோகத்தர் ஏ.எல். நளீன் பண்டார, காவல்துறை பரிசோதகர் ஏ.எச்.எம். சிறிசேன அபேசிங்க உள்ளிட்டோரும் நேற்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #ஜனாதிபதிஆணைக்குழு #காவல்துறைஅதிகாரிகள் #சாட்சியம்