200
பாறுக் ஷிஹான்
வாழும்போதே கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் . எங்களுடைய கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பல்வேறு கலைகளும் பண்பாட்டு அம்சங்களு நிறைந்து காணப்படுகின்ற மாகாணம் என கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். நவநீதன் தெரிவித்தார்.
பிரதேச கலை, இலக்கிய துறையில் மகத்தான சாதனை புரிந்த கலைஞர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (13) முற்பகல் நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.
கலாசார அலுவல்கல் திணைக்களத்தின் அனுசரணையோடு நாவிதன்வெளி பிரதேசம்,மற்றும் கலை மன்றங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கலைஞர் சுவதம் 2019 வேலைதிட்டதின் கீழ் பிரதேச கலை, இலக்கிய துறையில் மகத்தான சாதனை புரிந்த கலைஞர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கபட்டனர் இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். நவநீதன் பிரதம அதிதியாக கலந்து கொணடார்.
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். நவநீதன் அங்கு உரையாற்றுகையில்
வாழும்போதே கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் . எங்களுடைய கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பல்வேறு கலைகளும் பண்பாட்டு அம்சங்களு நிறைந்து காணப்படுகின்ற மாகாணம் ஆகவே கலை பண்பாட்டு அம்சங்களை வளர்த்தெடுக்க வேண்டிய பணி இன்றியமையாதது. இதில் பிரதேச செயலங்களின் பங்கு அபரிவிதமானது. நாங்கள் உள திருப்தி கலைஞர்களாக மாத்திரம் இருக்கின்றோம் நாங்களும் தொழில் முறை கலைஞர்களாக வளர்த்துகொள்ள வேண்டும். நாங்கள் கலை விற்பன்னர்களாக மாறும் போதுதான் கலைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தபடும் என தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் கூறுகையில்
கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்,கலைஞர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கலைகளின் வெளிப்படுத்தல்கள் நல்ல முறையில் இருக்கும் . அந்த அடிப்படையில் இப் பிரதேசத்தில் இருக்கின்ற பத்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நன்றி மறவாமல் தாங்கள் கற்றுக்கொண்ட கலைகள் அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் மருவி போகாமல் கடத்த பட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.அதன் மூலமே சரியான பெறுபேற்றினை எமது சமூகத்திற்கு பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
எனவே இவ்வாறான கலைஞர்கள் வாழும்போதே மதிக்கபடுகிறீர்கள்,பாராட்ட படுகிறீர்கள் அதே போன்று நீங்கள் கலைக்கு ஆற்ற வேண்டிய பங்கு அளப்பரியது இந்த சமூக பொறுப்பை சரியாக உணர்ந்து செயற்படும் போது சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் உண்மையான சமூக சேவையை மேற்கொள்ள முடியும்.
கலைகள் என்று பார்க்கும் போது நாம் பிறந்ததிலிருந்து இறுதிவரை கலைகளோடு பயணிக்கின்றோம்.பிறந்த போது பாடும் தாலாட்டோ, இறந்த போது வைக்கும் ஒப்பாரியாக இருக்கட்டும் அதே போல் வாழ்வியலோடு கலை பின்னிப் பிணைந்துள்ளது என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் எம் ,றிம்சான் , நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். #வாழும்போதே #கலைஞர்கள் #கௌரவிக்கப்பட
Spread the love