பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கோர்பின் விலகியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து ஜெரமி கோர்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரித்தானிய #பொதுத்தேர்தல் #பின்னடைவு #ஜெரமிகோர்பின் #பதவிவிலகல் #பொரிஸ்ஜோன்சன்