வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இன்று வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர்னர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அசாம் முதல்வரின் வீடு உள்ளிட்டவை மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் நிலையில், முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றையதினம் தொலைபேச அழைப்பெடுத்த நபர் ‘கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகளிலும் ,தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்தத் தகவல் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து உடனே சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர், துணை முதல்வர் வீடுகள் முழுவதும் சோதனை நடத்தினர். எனினும் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 19) காலை தலைமைச் செயலகத்திற்கு சென்ற வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
வாகன நிறுத்துமிடத்தில் உள்ள வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் மேற்கொண்ட விசாரணைகளில் தொபைசி அழைப்பினை மேற்கொண்ட நபர் கோவையிலிருந்து பேசியது தெரியவந்துள்ளது. #வெடிகுண்டு #மிரட்டல் #தலைமைச்செயலகம் #நிபுணர்கள் #சோதனை