165
இலங்கையில் கடந்த உயிர்த்தஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் முகப்புத்தக கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை குற்றப்புலனாய்வு காவல்துறையினருக்கு வழங்குமாறு முகப்புத்தக தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். #முகப்புத்தக #தகவல்கள் #கோரிக்கை #உயிர்த்தஞாயிறு
Spread the love