இரகசிய காவற்துறையினர் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை…
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். இரகசிய காவற்துறையினர் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை நேற்று (19.12.19) தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக காவற்துறையினர் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.