145
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இலங்கை பயணமாகவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் இவ்வாறு இலங்கை செல்லவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு அனுபவமிக்க ராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Spread the love