கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமங்களின்றி இலகுவாக சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்வதற்
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையானது மாவட்டத்தில் இருக்கின்ற ஒன்றரை இலட்சம் பேருக்கும் மருத்துவ சேவைகளை வழங்குகின்ற ஒரு வைத்தியசாலையாக காணப்படுகின்றது. இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு இடங்களிலும் இருந்து வருகின்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்;தில் போக்குவரத்துவசதிகளற்ற வன்னேரிக்குளம், அக்கராயன், கோணாவில், வட்டக்;கச்சி, தர்மபுரம், உள்ளிட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்ற பெருமளவான நோயாளர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குகின்றனர்
இதனை விட விடுதிகளில் தங்கியிருக்கின்ற நோயாளர்களை பார்வையிடுகின்ற பார்வையாளர்களை உரியவாறு பார்வையிடுவதற்குஅனுமதிக்காது இடையூறுகள் விளைவிப்பதாகவும் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே பின்தங்கியபிரதேசங்களில் இருந்து போக்குவரத்து வசதிகள் இன்றி பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைக்குச்சென்று இவ்வாறு தாங்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் புதிதாக கடமைகளை பெறுப்பேற்றிருக்கின்ற வைத்தியசாலைப்பணிப்;பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இதில் கவனம் எடுத்துநோயாளர்கள் இலகுவாக சிகிச்சை பெற்றுச்செல்லக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. #கிளிநொச்சி #வைத்தியசாலை #நோயாளர்கள்#சிகிச்சை