வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவான கியூபாவில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோ-வை புதிய பிரதமராக ஜனாதிபதி மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.
சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வாழ்கின்ற அந்நாட்டின் ஜனாதிபதியாக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தபோது 1976-ம் ஆண்டு; பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டது. அவருக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரவுல் காஸ்ட்ரோ காலத்திலும் இதேநிலை நீடித்தது.
இந்நிலையில், 43 ஆண்டுகளாக இல்லாது காணப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் கடந்த பெப்ரவரி 24ம் திகதி கியூபா பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, அந்நாட்டின் சுற்றுல்லாத்துறை அமைச்சரான மானுவேல் மர்ரேரோ-வை கியூபாவின் புதிய பிரதமராக ஜனாதிபதி மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.
அவரது தலைமையில் 6 இணை அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை நாட்டின் முக்கிய விவகாரங்களை கவனித்தாலும் அனைத்து அதிகாரங்களும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஜனாதிபதி மிகுவேல் டயஸ் கனேல் ஆகியோரிடம் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கியூபா #பிரதமர் #நியமனம் #பிடல்காஸ்ட்ரோ