165
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணியால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மோசன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குள்ளான வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் கடந்த 24 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதும் இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லை.
Spread the love