விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வைத்தியசாலைச் சிகிச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் (27.12.19) ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.