தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முன்றாம் திகதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பின் ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் போட்டியிடுவது தொடர்பிலும் மற்றும் மாவட்ட ரீதியாக பங்காளிகட்சிகளுக்கு எத்தனை ஆசனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிக்கு எத்தனை ஆசனம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக நடைபெற்றுள்ளது ஜனவரி மூன்றாம் திகதி நாடாளுமன்ற அமர்வின் பின் மீண்டும் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் கொழும்பில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது தொடர்பில் குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக மலையக் கட்சிகளுடனும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. இது குறித்து ஜனவரி மாதம் மூன்றாம் திகதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளான புளெட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட கட்சி யின் அங்கத்தவர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது .