2018ஆம் ஆண்டு தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட 13 பேரைக் காப்பாற்றிய மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தொற்றுநோயால் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தாய்லாந்து கடற்படையை சேர்ந்தவர் பீரட் பக்பரா என்பவரே இவ’வாறு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவச் சிகிச்சையில் வைத்திருக்கப்பட்ட பீரட் கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டள்ளது அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அவரின் சொந்த ஊரான தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சட்டனில் புதைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஜூன் 23ம் திகதி 11 வயதிலிருந்து 16 வயதுடைய 12 கால்பந்து வீரர்களும் அவர்களது 25 வயது பயிற்சியாளரும் தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த தாம் லுவாங் என்ற குகையில் மாட்டிக்கொண்டனர்.
குகையில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் கால்பந்துவீரர்கள் வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என தாய்லாந்து ராணுவம் அறிவித்திருந்தது
எனினும் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஒக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை விநியோகம் செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.
இதன்போது தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரரான சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஒக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கான ஒக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் திகதி உயிரிழந்திருந்தார்
இதனையடுத்து 17 நாட்களுக்கு பின்னர் குகைக்குள் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்டுபட்டு சியாங் ராய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியின் போது ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீரட் பக்பரா என்பவரே இவ்வாறு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
அந்த குகை 2019 நவம்பர் மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #தாய்லாந்து #குகையில் #உயிரிழப்பு #கால்பந்துவீரர்கள்