விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து சென்ற தந்த அம்பியூலன்ஸ் வண்டியும் திரும்பிச் சென்றது.
சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் அறிவுறுத்திலிற்கு அமைய அவர் மீண்டும் குறித்த தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (27.12.19) ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.