178
வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு காவல்துறைஅணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில், பிஎஸ்எம் சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். #வடமாகாண #ஆளுநர் #சார்ள்ஸ்
Spread the love