234
நெல்லியடி பகுதியில் கைக்கலப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லியடி ராஜாராமன் கிராம பகுதியில் இன்று வியாழக்கிழமை இளைஞர்கள் சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைக்கலப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதை பொருளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்துறையினர் நெல்லியடி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #மோதல் #கஞ்சா #நெல்லியடி
Spread the love