160
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே சடலமாக மீத்கப்பட்டவராவர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் சுழியில் அகப்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்டார். நீரில் அடித்து செல்லப்பட்டவரை காவல்துறையினர் பொதுமக்கள் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போது , அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். #தொண்டமனாறு #இளைஞன் #மீட்பு #புலோலி
Spread the love