காவற்துறையினரால் நேற்றையதினம் கைதுசெய்ப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இன்றையதினம் நுகேகொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.