நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து ஏனைய நாடுகளுடன் சமநிலையை பேணக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பணிகள் ஆரம்பம்…
கடந்த 50 தினங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள்……..
தேசிய அபிமானத்தையும் இறைமையையும் பாதுகாத்து எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளத்தக்க கௌரவமிக்க ஆட்சி ஏற்படுத்தப்படும், என எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ”சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக கடந்த 50 நாட்களுக்குள் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் உலகளாவிய கேள்விக்கும் ஏற்ற தொழிற்படையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாடசாலை மட்டத்திலிருந்து அவற்றை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அதன் முதற்கட்டமாக,
- ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல்.
- உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும்.
- உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கிய மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுடனும் கூடிய தொழிநுட்பவியலாளர்களாக உருவாக்குவதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- வறிய குடும்பங்களிலுள்ள எந்தவித தொழிற் தகைமைகளையும் கொண்டிராத இளைஞர் யுவதிகளுக்காக செயலணியொன்றினை ஸ்தாபித்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும்.
- எதிர்காலத்தில் தாதியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி நெறிகளை பயில்பவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- கல்வி நடவடிக்கைகள் பற்றிய செயலணியொன்றினை ஸ்தாபித்து கல்வி மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவினை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர் மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.
அரச சேவையானது நாட்டின் முன்னேற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய துறையாகும். முறையான, வினைத்திறனான மற்றும் பயன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கான முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை சீரமைக்கும் நோக்கில் அத்தகைய சில நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
- அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் சிபாரிசை பெற்றுக்கொள்ளல்.
- அரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினதும் நிழற்படங்களுக்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.
- அரச நிறுவன தலைவர்களின் சம்பள திருத்தம், 20 இலட்சமாகக் காணப்பட்ட டெலிகொம் நிறுவன தலைவரின் சம்பளத்தை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.
- அரச நிறுவனங்களில் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அரச நிறுவனங்களில் அவசியமற்ற அனைத்து வைபவங்களையும் றிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களும் சமமாக உள்வாங்கப்படுமாறு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை அரச சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான தீர்மானமாகும்.
உள்நாட்டு விவசாயத் துறையை மேம்படுத்தி எமது மரபுரிமைகள் மற்றும் தனித்துவத்துடன் கட்டியெழுப்பப்படும் பொருளாதார கொள்கைக்கு ஜனாதிபதி அவர்கள் முன்னுரிமை அளித்துள்ளார்.
- 300 மில்லியன்களுக்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீளச் செலுத்தும்போது பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் ஏல விற்பனையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
- பட்டங்கள், வெசாக் கூடுகள் போன்ற உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குதல்.
- அரச முதலீடுகள், தேசிய அபிவிருத்தி திட்டங்கள், பெறுகை செயற்திட்டங்களின் பகுப்பாய்வு, முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக்குவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகத்தை நிறுவுதல்.
- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை நிறுவுதல்.
- தேசிய கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறையில் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மணல், களிமண் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் முறையை நீக்குதல்.
- பாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் தமக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கான திருத்தங்களை அறிமுகம் செய்தல்.
- மாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்ட தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல சேவைகள் நிலையத்திற்கு கொண்டு செல்லல்.
- கோதுமை மா இறக்குமதியில் நிலவிய பிரச்சினையை நீக்குவதற்காக ஏனையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல்.
- மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை நிறுத்துதல்.
- எதிர்வரும் போகத்திலிருந்து விவசாய உற்பத்திகளை விஞ்ஞான ரீதியான முறைக்கமைய கொள்வனவு செய்தல்.
- நாடு முழுவதும் நெற் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்தல் மற்றும் சேதமடைந்துள்ள களஞ்சியசாலைகளை புனரமைத்தல்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நேயமான அரச நிர்வாகத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள முன்னுதாரண நடவடிக்கைகள் ஏராளமானதாகும்.
- கடந்த அரசாங்கத்தை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்து செல்லுதல்.
- அரச ஊடக நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டினை உறுதி செய்தல்.
- ஜனாதிபதி அலுவலக ஆளணியினர் மற்றும் வாகன பேரணியை மட்டுப்படுத்தல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக தமது சொந்த வீட்டினை தேர்ந்தெடுத்தல்.
- இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையை 16 ஆக குறைத்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையும் குறைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தல்.
- பொதுமக்களின் நிதியில் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுக்கு அரசியல்வாதிகளின் உருவப்படம் தாங்கிய பெயர்பலகைகளுக்கு பதிலாக வீதிப்பெயருடன் அரச இலட்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.
- தமது பதவிக் காலத்திற்குள் பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்ப நிகழ்விற்காக பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்படும் இராணுவ அணிவகுப்பு போன்றவற்றை தடை செய்தல்.
பொதுமக்களின் நலனிற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
- முதன்முறையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும்போது சலுகை வட்டி வீதத்துடன் நீண்டகால கடன் வழங்குதல்.
- உறுதிச் சான்றிதழ்களை (COC) ஒரே தினத்தில் வழங்குதல்
- வீடுகள் மற்றும் சிறு வியாபார கட்டிட நிர்மாணிப்பின் போது பூரணப்படுத்தப்பட்ட திட்ட வரைபடங்களுக்கு ஒரே தினத்தில் அனுமதியளித்தல்.
- வாகனப் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமான மாற்று வீதிக் கட்டமைப்பினை உருவாக்குதல்.
- தொலைபேசி கட்டணத்துடன் அறவிடப்படும் 25 சதவீத வரியினை குறைத்தல்.
- 15 சதவீத VAT வரியை 8 சதவீதமாகக் குறைத்தல்.
- அனர்த்த நிலைமைகளின்போது போதுமான நிவாரணங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ள சுற்றுநிரூபங்களை திருத்துவதற்கு அறிவுறுத்தல்.
- தடுப்பு இல்லங்களில் வசிக்கும் மக்களை பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- இலகு வாகனங்களுக்கான சாரதி அத்தாட்சிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு கண் பரிசோதனையை மாத்திரம் மேற்கொள்ளல்.
- நாடு பூராகவும் சிறிய நகரங்களை அழகுபடுத்தி நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- ஜனவரி 01ஆம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு உரிய பாடகர், பாடகிகளுக்கு பாடல் உரிமைக்கான கொடுப்பனவினை வழங்குதல்.
- பாதாள உலக கோஷ்டியினரைக் கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு போதுமான அதிகாரங்களை வழங்குதல்.
- இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எம் மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.
- 09 மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்திற்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.
- சுற்றாடலை தூய்மைப்படுத்தல் தொடர்பில் பொலிஸாரினதும் ஏனையவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்கான துரித வேலைத்திட்டம்.
சுயாதீன பொருளாதார கொள்கையை நோக்கி
- சகல மாவட்டங்களிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றிற்கு அரசினூடாக அனுமதியளித்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை தயாரித்தல்.
- எம்சீசீ ஒப்பந்தம் தொடர்பில் விரிவான கற்கையை மேற்கொண்டு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.
- நாட்டிற்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.01.08