நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்து தருமாறு, ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ..
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரனைகொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் 5பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 2018 ஆம் ஆண்டு விசாரணை எனக் கூறி அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
அதில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய நால்வரும் தற்பொழுதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு . குறித்த இளைஞர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு இளைஞர்களையும் விடுதலை செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..