169
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.
கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவீதத்தால் 11 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். #உலகதமிழாராய்ச்சிமாநாடு #படுகொலை #நினைவேந்தல்
Spread the love