யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மன்னாரில் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயார்-பொருட்கள் கொள்வனவில் மக்கள்.
இந்துக்கள் நாளைய தினம் புதன் கிழமை (15) தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் இன்றைய தினம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-மன்னார் பஸார் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் இந்து மக்கள் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைகளுக்கான பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து வருகின்றனர்.
-நாளை புதன் கிழமை (15) தைப்பொங்கல் பண்டிகையை நாடளாவ ரீதியில் உள்ள இந்து மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் பொங்கி கொண்டாட உள்ளனர்.
இதே வேளை நாளை புதன் கிழமை தைத்திரு நாளை நினைவு கூறும் வகையில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோழிக்க தேவாலயங்களில் பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
தைப் பொங்கல் தினமான நாளை புதன் கிழமை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோழிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெறும்.
குறிப்பாக இறைவன் அழித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
குறித்த பொங்கல் நிகழ்வானது மறைமாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெரும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்தார்.