141
யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த வங்கி முகாமையாளரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக காரின் மீது பரவாததால் , கார் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love