ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையானார்..
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக மீள் பரிசீலனை மனு ஒன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீள் பரிசீலனை மனு விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
வௌ்ளை வான் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ராஜித்தவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி ரஞ்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு தொடர்பிலேயே அவர் இன்று (17) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.