முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் குறித்து மூன்று நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ராஜீவ் படுகொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுவிட்டதாக மத்திய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்து.
இருப்பினும், சில தகவல்களை உறுதி செய்வதற்கு வெளிநாடுகளுக்கு சில கடிதங்களை அனுப்பியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, ராஜீவ் படுகொலை தொடர்பான தகவல்கள் அடங்கிய 25 கடிதங்கள் 24 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் கடிதங்கள் குறித்து 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.