சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் 4,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 51 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1400 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.